பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

723 வேலை நிறுத்தம் ஏன்? "எதைத்தான் நீங்கள் எனக்காக வாங்கவில்லை?" என்று அவருடைய சிண்டைத் தட்டி -இல்லையில்லை, அவருக்கேது சிண்டு? - வழுக்கைத் தலையைத் தட்டி விட்டாள் அவள்! பத்மநாபன் உள்ளங் குளிர்ந்து, உச்சி குளிர்ந்து, "ஆஹா, வாரிக்கொண்டு போகிறது!" என்றார் "யாரை?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் அவள். "உன்னைத்தான் ..!" "என்னையா?" "ஆமாம், உன் தங்க நிறக் காலுக்கு இந்த நீலநிறப் பட்டை ரொம்ப ரொம்ப ஜோராயிருக்கிறது." "எங்கே, காட்டுங்கள்!' என்று அவள் எழுந்தாள் "வேண்டாம், வேண்டாம் -நானே காட்டுகிறேன்!" என்று காலை அவள் முகத்துக்கு நேராகத் துாக்கிக் காட்டினார் பத்மநாபன், 'ஐய, போங்கன்னா!" என்று அவள் விலகிய துண்டை இழுத்து மூடிக்கொண்டு, "ஆமாம், இன்னொரு காலுக்குப் போடவில்லையே. என்றாள்