பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சிறிய மணிப்பொறி ஒன்று மெதுவாய் இயங்கினாலும் தவறு கேர்கிறது. வேகமாப் இயங்கினாலும் தடுமாற்றம் ஏற்படுகிறது மனிதக் குடும்பங்களிலும், மனிதர்களின் கூட்டமைப்பிலும் இத்தகைய விளைவுகளே தோன்றுகின்றன எல்லாம் நமக்காக! எல்லாரும் ஒன்றாக! எல்லாரும் சமமாக!... இங்கிலையே அறிவுநிலை! அரிய நிலை! அமைதிக்குரிய கிலை! உயர்வு என்பதும் தாழ்வு என்பதும் உணர்வு களின் ஊனத் தன்மையாகும். ஒற்றுமை என்பதும், ஒருகிலை, சமநிலை என்பதும் உண்மையானவை; உரிமையானது! உயர்வானது! மே லவர் கீழவர் என்பதும், முதலாளி தொழிலாளி என்பதும் இருவேறு மாற்றங்கள். இரண்டு கிலைகளும் ஒன்றின் கூட்டே இரு பக்கங்களில் வேற்றுமை ஏது? செயலும் பயனும் தொடர்புடையனதாமே! அது போலவே அரசும் அமைப்புகளும் வேற்றுமை யுடையன அல்ல; வேறு வேறு என்பதும் அல்ல. ஒன்றன் கூறு மற்றொன்று. உடல் உறுப்பு களை ஒத்தவையே ஆட்சி அமைப்பும் நோய் வாராமல் கருத்தோடு இருப்பது முதற் கடமை; பொறுப்பு: அறிவுடைமை! நோய் தோன்றத் தொடங்கினால் தொடக்கத்திலேயே கண்டறிந்து தீர்க்க முயல வேண்டும். மனிதர்க்கு உரியதே சமூகத்திற்கும் பொருந்தும். தொழிற் கூடங்களுக்கும் பொருந்தும்; ஆட்சிச் செயலரங்குக்கும் பொருங்தும்.