பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 735 "அட பாவமே, என்னால் உங்கள் இதயம் ஏன் உடைய வேண்டும்? - இதோ சொல்லி விடுகிறேன் - அவர் என் தோளைப் பற்றினார் நான் அவர் தோளைப் பற்றினேன் - இருவரும் எங்கள் சிரிப்பால் இருட்டை விலக்கிக் கொண்டு கட்டிலுக்கருகே சென்றோம்." "ஐயையோ!" "அப்புறம் கேளுங்களேன் - அவர் என் காதோடு காதாக ரகசியம் பேசினார்; நான் அவர் காதோடு காதாக ரகசியம் பேசினேன்.” "வெறுங் காது மட்டுந்தானே?" 'இல்லை, உதடுங்கூடத்தான்!" அவ்வளவுதான் படாதிபதி துள்ளி எழுந்தார் - "முடியாது; இதை என்னால் சகிக்கவே முடியாது!" என்று கத்தினார். அவள் கலகலவென நகைத்தபடி, அவரை இழுத்துத் தன் அருகே உட்கார வைத்துக் கொண்டு, "அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை! அந்தப் பயல் என் கையைப் பற்றினானோ இல்லையோ, ஐ ஆம் சாரி, ஐ ஆம் ஸாரி, ஐ ஆம் வெரி வெரி ளலாரி' என்று