பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 யோ, கானா என்பதும், உயர்வு தாழ்வு என்பதும், அமைப்புகளின் வேர்களைப் பறிக்கின்ற தீபவுணர்வுகளாகும். நாம் அனைவரும் சமமானவர்கள். பாரத சமுதாயம் எனப் பாரதி பாடியதைப் பாடுவதோடு கிற்காமல், பாராட்டுவதோடு கிற்காமல், சிந்தித்துச் செயலில் கைக்கொள்ள வேண்டும். குறைகள் தோன்றா வண்ணம் இருப்பதே திறமுடைய அமைப்பாகும் தோன்றினால், அதை அறிந்து உடனடித் தீர்வு காண வேண்டியதும் பொதுப் பொறுப்பாகும். தனி கிர்வாகமோ, பொது கிர்வாகமோ, அரசு கிர்வாகமோ எதுவாயினும் மனிதரையே சார்ந்து உள்ளது. மனிதத் தேவையும். மனித உரிமையும், மனிதர்தம் மன நிறைவும் கருதப்பட வேண்டும்; காக்கப்பட வேண்டும். தேவை என்பது ஒரு புறமும் தீர்வு என்பது மறுபுறமுமாய், இணையாமல் பிரிந்து கிற்கக் கூடாது. இணைந்தே, சேர்ந்தே இயங்க வேண்டும். குறை எனில் உடனே களையப்பட வேண்டும். காம் அங்த நிலையில் இருந்தால்...? எனும் கருத்து ஒவ்வொருவரிடமும் கிலைபெற்று இருக்க வேண்டும். போராட்டங்களால் தீர்வு தேடும் முறை பண்பட்ட சமுதாயத்தை உருவாக்காது; பொதுமை எனும் கிலை இல்லை என்பதே வெளிப்படும். குறைகளைக் கேட்க, பரிவாகக் கவனிக்க, முறையாகச் செயல்பட, நிலைமை புரிந்து கொள்ளத் தக்கதாக, இரு சாராரும் இணைந்து