பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வேலை நிறுத்தம் ஏன்? "நல்ல ஆளய்யா, நீர்! நம்முடைய அதிகார மெல்லாம் கதாசிரியர் கந்தசாமியிடம்தான் செல்லும்; நட்சத்திரங்களிடம் செல்லுமா? அவர்களிடம் தான் ஆனானப்பட்ட முதலாளியே தோப்புக்கரணம் போட வேண்டியிருக்கிறதே, நான் என்ன செய்ய?” "அதுவும் உண்மைதான் அடுத்தாற் போல் வேறு எங்கேயாவது சான்ஸ் கிடைக்க வேண்டுமென்றாலும் அவர்களுடைய தயவுத்ானே நமக்கு முதலில் வேண்டி யிருக்கிறது?" 'நமக்கு மட்டுமென்ன? முதலாளிக்குக் கூடத்தான்! அவர்கள் இல்லையென்றால் அவருக்கு யார் காலணா கொடுப்பார்கள்?" 'அதற்காக நீங்கள் 'வெறும் பிரியாணி வீரனாகவே இருப்பதா?" "வேறே வழி? ஒரு நல்ல 'பைனான்ஷியர்' கிடைக்கிற வரையிலே அப்படித்தான் இருக்கணும்!" "பைனான்ஷியர் சும்மா கிடைத்து விடுவானா? நான் ஒரு மாலாவைத் தயார் பண்ணி வெச்சிருக்காப் போல நீங்க ஒரு பாலாவைத் தயார் பண்ணி வெச்சிருக்கணும்!" என்றான் பீதாம்பரம் கொஞ்சம் 'குத்தலாக,