பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

744 வேலை நிறுத்தம் ஏன்? "எல்லாம் 'ஸெட்டிலே பார்த்துக் கொள்ளலாம்; நீர் சீட்டாட வருகிறீரா?" 'அதற்குத்தான். ஒன்றுக்கு மூன்று உதவி டைரக்டர்கள் இருக்கிறார்களே! உங்களையும் சேர்த்தால் நாலு போதாதா சீட்டாட்டத்துக்கு?" "சரி, நீர் தூக்கம் போடப் போகிறீராக்கும்?" "போடாவிட்டால் இரவு பூராவும் முதலாளியை வளைய வளைய வந்து எப்படி எயார், காக்கா பிடிக்க முடியும்?" "அப்படியே செய்யுங்கள்; ஆனால் ஒன்று." "என்ன அது?" 'அடுத்த மாதம் எடுக்கப் போகும் க்ரூப் டான்ஸுக்கு மட்டும் நீர் இப்பொழுதே ஏற்பாடு செய்து விட வேண்டும்." "அதெல்லாம் எதற்கு, ஸார்? கோஷ்டி நடனங்களைப் பார்த்துப் பார்த்துத்தான் ஜனங்களுக்கு அலுத்துப் போய்விட்டதே?" 'அவர்கள் கிடக்கிறாாகள்; "க்ரூப் டான்ஸ்' இல்லையென்றால் முதலாளியின் உபயோகத்துக்குப்