பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 வேலை நிறுத்தம் ஏன்? இந்தச் சமயத்தில் டைரக்டர் சோமு குறுக்கிட்டு, "கதையை நீங்கள் முடித்து விட்டால் போதுமா ஸார், நாங்கள் அதைப் பார்க்க வேண்டாமா?" என்றார். "ஐயோ பாவம், அதற்கெல்லாம் உங்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது? என் கணக்கைத் தீர்க்கும் வரை, அல்லது என் கதையைத் திருடி அதை வேறு யாருடைய பெயரிலாவது வெளியிடும் வரை, உங்கள் கதையை நாங்கள் இன்னும் பார்க்க வில்லை" என்று நொண்டிச் சமாதானம் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள் அவ்வளவுதானே?" "கேட்டிரா, பீதாம்பரம்? இவருடைய கதையைப் பார்ப்பதற்காக என் அருமையான காலத்தை நான் வீணாக்க வேண்டுமாம்!" "அவன் கிடக்கிறான், வாழத் தெரியாதவன் - நீங்கள் வாருங்கள், போவோம்!' என்று வெறும் பிரியாணி வீரனை வீராப்புடன் அழைத்துக் கொண்டு நடந்தான் காக்கா, "சீ இதுவும் ஒரு வாழ்க்கையா' என்று அலுத்துக் கொண்டான், மானத்தைத் தவிர வேறொன்றையும் பெரிதாக மதிக்காத ஏழை கந்தசாமி.