பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஸ்பென்ஸ்'ரை மூடுவதற்குள் ஒடிப்போய் "ஸ்பான்ஜ் வாங்கிவிட வேண்டுமென்று நினைத்த தாகவும், அதற்காக மேக்கப்பைக் கலைத்த வேகத்தில் அந்த ஆக்ஸிடெண்ட்'நேர்ந்து விட்டதாகவும் திருவாய் மலர்ந்தருளுகிறது நட்சத்திரம் "ஆஹா!.உனக்கா, ஸ்பான்ஜா? அதை நீயா வாங்கப் போக வேண்டும்? ஐயையோ! இந்த அடிமைக்கு அந்த பாக்கியம் கிட்டக்கூடாதா? அதற்கு நான் கொடுத்து வைக்கக் கூடாதா?" என்று பத்மநாபன் பிரலாபிக்க, அதற்குள் மற்ற படாதிபதிகள் அவளுக்கு நேர்ந்த அபாயத்தைக் கேள்வியுற்று அங்கே விழுந்தடித்துக் கொண்டு ஓடி வர விஷயம் அம்பலமாகி விடுகிறது. அதாவது, நட்சத்திரம் நாளை குளிப்பதற்கு ஸ்பான்ஜ் வேண்டும்' என்ற விஷயந்தான்! கிடைத்தற்கரிய இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடுவார்களா, படாதிபதிகள்? மறுநாள் காலை ஏகப் போட்டி நட்சத்திரத்துக்கு ஸ்பான்ஜ் வாங்கிக் கொடுக்கும் பாக்கியத்தை அடையத்தான்! - அதிலும், படாதிபதிகள் போட்டி என்றால் கேட்க வேண்டுமா? - நூற்றுக்கணக் கான கார்கள் அந்த நட்சத்திரத்தின் பங்களாவை நோக்கிப் பறக்கின்றன - போக்குவரத்தே ஸ்தம்பித்து