பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754 வேலை நிறுத்தம் ஏன்? விடுகிறது - லீலாவும் அவள் தாயார் குஞ்சம்மாளும் செய்வது இன்னதென்று அறியாது திகைக்கின்றனர். போலீஸ் வருகிறது; இன்று என்ன விசேஷம்?" என்று கேட்கிறது. 'ஸ்பான்ஜ் விஷயத்தை வெளியே சொன்னால் சிரிப்பார்களே என்று குழந்தைக்குப் பிறந்த நாள்' என்று சொல்லிச் சமாளிக்கிறாள் குஞ்சம்மாள். கடைசியாகப் பத்மநாபன் எல்லோரையும் முந்திக் கொண்டு மேலே செல்கிறார். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் ஸ்பான்ஜ் ஜை முதன் முதலில் கொடுக்கும் பாக்கியத்தைப் பெறுவதுடன், கையோடு கொண்டுவந்திருந்த பர்மா பாதரrைகளையும் வர்ணவாரியாகப் பிரித்து, தானே - தன் கையாலேயே -அந்த நட்சத்திரத்தின் கால்களுக்கு வலிக்காமல் மாட்டி, இப்படியும் அப்படியுமாகத் திருப்பி அழகு பார்க்கிறார்; அவள் பாத கமலங்களை எடுத்துக் கன்னத்தில் ஒத்திக் கொண்டு ஜன்ம சாபல்யமடைகிறார். இந்தச் சமயத்தில் அரோகரா பாங்க் அனந்த சயனம் அய்யங்காரைப் பற்றிய பேச்சு அவர்கள் இருவருக்கு மிடையே அடிபடுகிறது.