பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 23 வெடிகுண்டு மருந்துகள், கூடாரங்கள், கம்பளிச் சட்டைகள் , கண்ணாடிச் சாமான்கள், பித்தான்கள், துணிமணிகள் முதலியவைதான்! இவற்றையெல்லாம் அதிகப்படியான தொழிலாளி களின் ஓயாத உழைப்பைக் கொண்டு பிரிட்டிஷார் பெற்றதற்குப் பதிலாக, இந்தியாவின் இயந்திர சாதனங் களைப் பெருக்கி, அதன் உற்பத்திச் சக்தியை அதிகப் படுத்தியதன் மூலம் பெற்றிருந்தால், நம் நாட்டில் இப்போது எதற்குமே பஞ்சம் ஏற்பட்டிருக்க முடியாது. இராணுவத்திற்குப் போனது போகப் பொது மக்களுக்கு வேண்டிய பொருள்கள் கிடைத்திருக்கும். பிரிட்டிஷாரும் யுத்தத்திற்கு வேண்டியவற்றை இந்தியாவிலிருந்து வாங்குவதற்காக ஏராளமான காகித நோட்டுகளை அச்சடித்துக் கொடுத்திருக்க வேண்டாம். அதன் மூலம் விலைவாசிகள் விஷம் போல் ஏறுவதற்கும், பதுக்கல்முறை, கள்ளமார்க்கெட், லஞ்சப் பேய் முதலியவை தலைவிரித்தாடுவதற்கும், ஏழை மக்கள் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றித் தவிப்பதற்கும், கல்கத்தாவில் முப்பத்தைந்து லட்சம்