பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Ꮾ வேலை நிறுத்தம் ஏன்? ஏழை ஜனங்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்று அவர்கள் ஏகாதிபத்தியத்தின் சதிக்குத் துணையாக நின்றனர். இந்தச் சமயத்தில் பொது ஜன நன்மைக் கென்று இந்திய சர்க்கார் கொண்டு வந்த விலைக் கட்டுப் பாட்டுத் திட்டங்கள், பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதைப் போல் அமைந்தன. நேற்று வரை நம் கண்ணுக்கு முன்னால் காட்சியளித்துக் கொண்டிருந்த பொருள்களெல்லாம் இன்று கண்ணுக்குத் தெரியாமல் மறைய ஆரம்பித்தன. கள்ள மார்க்கெட் தலையெடுத்தது. * முதலாளி வர்க்கமும், வர்த்தக வர்க்கமும் தங்கள் கனவிலும் காணாத லாபக் கொள்ளையைக் கண்டன. வரி வாய்தாக்கள் மூலம் ஏகாதிபத்தியத்தின் கஜானாவையும் வேண்டிய மட்டும் நிரப்பின. 8 அன்றைய கொடுமை நிலைகளை இக்கால இளைஞர் உலகம் அறியாது; முதியோர், கண்ட காட்சியை மறந்திரார்