பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 27 இந்த அக்கிரமத்தை, அநீதியை யாராவது எடுத்துக் காட்டும்போது, "வியாபாரம் என்றால் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது தானே!' என்று சில தேசபக்த சிகாமணிகள் சாதித்தனர்.! யுத்தம் ஆரம்பித்த மூன்று வருட காலத்துக்குள் இந்தியக் கம்பெனிகளின் லாபம், ஒன்றுக்கு ஐந்து மடங்கு, ஆறு மடங்கு என்று உயர்ந்தது. ஆனால், அத்தகைய லாபக் கொள்ளைக்குப் பெரிதும் காரணமாயிருந்த தொழிலாளிகளின் சம்பளமோ ஒன்றுக்குப் பாதிகூட உயரவில்லை. இந்த நிலையில் கஷ்டப்படும் தொழிலாளி களுக்குக் கருப்பு மார்க்கெட் தெய்வம் காட்சியளிக்க வில்லை. ஆகவே தங்களுக்கு வேண்டியவற்றை வெள்ளை மார்க்கெட்டில் பெற்று அவர்களில் பெரும்பாலோர் உயிர் வாழ முடியவில்லை. பிரிட்டிஷாரின் சுயநலக் கொள்கையினாலும். இந்திய முதலாளிகளின் பேராசையினாலும், தொழிலாளிகள் யுத்த காலத்தின் போதுதான் கஷ்டப்பட்டார்கள்