பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வேலை நிறுத்தம் ஏன்? என்றால், சமாதான காலத்திலும் அவர்களைப் பிடித்த கஷ்டம் விட்டபாடில்லை. யுத்த காலத்தின் போதாவது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருள்களை வாங்குவதற்குப் போதுமான சம்பளம் கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். சமாதான காலத்திலோ மேற்கூறிய கஷ்டத்தோடு வேலையில்லாத கஷ்டமும் சேர்ந்து கொண்டது; சேர்ந்து கொள்ளப் போகிறது இந்தியாவின் இயந்திர சாதனங்களைப் பெருக்காமலும், உற்பத்திச் சக்தியை அதிகரிக்காமலும், அதிகப்படியான தொழிலாளிகளின் ஓயாத உழைப்பைக் கொண்டு யுத்த காலத்தில் பிரிட்டிஷார் தங்கள் இராணுவத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டதோடு, இந்திய முதலாளி வர்க்கத்தையும், வர்த்தக வர்க்கத்தையும் காகித நோட்டுக் கடலில் மூழ்கடித்தார்களல்லவா? அதன் பலனாக, பிரிட்டிஷ் சர்க்காருக்கோ இந்திய முதலாளி வர்க்கத்துக்கோ சமாதான காலத்தில் நஷ்ட மொன்றும் ஏற்படவில்லை; ஏற்படப் போவதுமில்லை.