பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 29 அவர்களுடைய நலனுக்காக அல்லும் பகலும் அனவரதமும் உழைத்து இளைத்த உழைப்பாளி வர்க்கத்துக்குத்தான் கஷ்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது; ஏற்படப் போகிறது யுத்தகாலத்தில் இராணுவத் தேவையைப் பூர்த்தி செய்து கொடுத்த அதிகப்படியான தொழிலாளிகள், சமாதான காலத்தில் இராணுவத் தேவையில்லாததால் வேலையில்லாமல் கஷ்டப்படுகின்றனர். கஷ்டப்படப் போகின்றனர். இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பேராசை பிடித்த முதலாளி வர்க்கம் தன்னுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறது: பயன்படுத்திக் கொள்ளப் போகிறது வாழ்க்கைச் செலவுக்குப் போதிய வருவாய் இல்லாத தொழிலாளிகள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும்போது, முதலாளிகள் வேலையில்லாத தொழிலாளிகளை அவர்களுடன் போட்டிக்கு விடுகின்றனர்; விடப் போகின்றனர்! இந்தியாவில் இந்து - முஸ்லிம் சச்சரவை உண்டாக்கித் தங்கள் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாத்துக்