பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வேலை நிறுத்தம் ஏன்? மாதம் முப்பத்தைந்து படி அரிசியாவது கட்டாயம் வாங்கியாக வேண்டும். முப்பத்தைந்து படி அரிசியின் தற்காலக் கட்டுப் பாட்டு விலை ஏறக்குறையப் பதினைந்து ரூபாய் ஆகிறது. - இன்னும், போதாக் குறைக்குக் கள்ள மார்க் கெட்டில் ஒன்றுக்கு இரண்டு மூன்று மடங்கு விலை கொடுத்து அரிசி வாங்க வேண்டிய அவசியமும் தொழிலாளிகளுக்கு ஏற்படாமற் போகவில்லை. அரிசிக்கு மட்டும் பதினைந்து ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டால், அப்புறம் உப்பு, பருப்பு, மிளகாய், புளி, எண்ணெய் முதலிய பலசரக்குச் சாமான்க ளெல்லாம் வேண்டாமா? அதற்காகக் குறைந்த பட்சம் இந்தக் காலத்தில் பத்து ரூபாயாவது வேண்டும். என்னதான் சிக்கனமாகச் செலவு செய்தாலும் தற்காலம் கறிகாய்க்கு மாதம் பதினைந்து ரூபாயாவது வேண்டும். இவற்றையெல்லாம் வேக வைத்துத் தின்பதற்குச் சர்க்கார் கொடுக்கும் ரேஷன் விறகு மட்டும் போதாது; வேறு வகையிலும் வாங்கியாக வேண்டும்.