பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 33 வேறு வகை என்றால் என்ன? கள்ள மார்க்கெட் தான் இதற்கு மாதம் ஐந்தாறு ரூபாயாவது ஆகும். எண்சாண் உடம்புக்கு எட்டுக்கு எட்டு அடி உள்ள ஒரே ஒரு அறையில் குடியிருந்தாலும்கூட அந்த அரண்மனைக்கு மாதம் ஐந்த்ாறு ரூபாய் இல்லாமல் எந்த வீட்டுக்கார மகானுபாவனும் விடமாட்டான், ! வறுமையின் காரணமாக ஒட்டி உலர்ந்துபோன தன் தாயின் ஸ்தனத்தைப் பற்றிப் பற்றி இழுத்தும் ஒரு சொட்டுப் பால்கூடக் கிடைக்காமல் கதறும் குழந்தைக்குத் தினசரி உழக்குப் பாலாவது வேண்டும். அதற்காக மாதம் ஏழரை ரூபாய் ஆகிவிடும். இவை தவிர, வியாதி வந்தால் வைத்தியச் செலவு, சலவைக்கூலி, ஷவரக்கூலி, புடவை, துணிமணிகள், கல்யாணம், உத்திரகிரியை, திவசம், பண்டிகை முதலியவை யெல்லாம் இருக்கவே இருக்கின்றன: இத்தனை செலவுகளுக்கும் ஓர் ஏழைத் தொழிலாளி எப்படி ஈடு கொடுப்பான் என்பதை யுத்த காலத்தில் அபரிமிதமான லாபக் கொள்ளையடித்த