பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வேலை நிறுத்தம் ஏன்? முதலாளிகள் சிறிதாவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா? கிடையவே கிடையாது ! பதை பதைக்கும் வெயிலில் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் ரயில்வே காங்கிக் கூலிக்குப் பன்னிரண்டு ரூபாய் மாதச்சம்பளம் கொடுக்கிறார்கள்! இரவு பகல் என்று பாராது ரயில்வே ஸ்டேஷனி லேயே பழியாய்க் கிடக்கும் பாய்ண்ட்ஸ்மேனுக்குப் பதினெட்டு ரூபாய் மாதச் சம்பளம் ! பஞ்சாலையில் நாள் முழுவதும் மூச்சுத் திணறப் பாடுபடும் பாட்டாளிக்கும் மாதம் பதினெட்டு ரூபாய் தான் சம்பளம், ! ஏறக்குறைய அதே சம்பளந்தான் ஹேட்டும் பூட்டும் போட்டுக்கொண்டு மிரட்டல் உருட்டல் களுடன் வேலை பார்க்கும் போலீஸ்காரர்களுக்கும்! இந்த எழுத்தறிவிக்கும் இறைவன் மார்கள் இருக்கிறார்களே, பஞ்சகச்சம் வைத்துக் கட்டிக் கொண்டு, சட்டையும் தலைப்பாகையும் போட்டுக் கொண்டு - அவர்களுக்கு என்ன சம்பளம் தெரியுமா? மாதம் பதினாறு ரூபாயும் பதினெட்டு ரூபாயுந்தான் ! இந்த லட்சணத்தில்தான் பெரும்பாலான தொழிலாளிகள் இன்றுவரை சம்பளம் பெற்று