பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 45 ஆகவே, அவர்களைப் பகைத்துக் கொள்ளாமல் தொழிலாளிகளுக்கு நன்மை எதுவும் செய்ய முடியாத நிலைமையைக் காங்கிரஸ் அடைந்தது. பத்து வருஷங்களுக்கு முன்னால் பெரும்பாலான மாகாணங்களில் காங்கிரஸ் பதவி ஏற்றபோதுகூட இதே நிலைமையில்தான் இருந்தது இன்றும் அந்த நிலைமையில் மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடவில்லை. இடைக்காலத் தேசிய சர்க்கார் ஏற்பட்டு நான்கு மாதங்களாகிவிட்டன. மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரிகள் பதவி ஏற்றுப் பத்து மாதங்களாகிவிட்டன பொதுஜன ஆதரவைப் பெற்ற இந்த மந்திரி சபைகள், இன்றுவரை ஏழை மக்களுக்காக என்ன செய்து இருக்கின்றன? ஏதும் அறியாத பாமரர்களான ஹிந்துக்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு ஏதோ வந்துவிட்டது என்றும் வரவில்லை என்றும் நினைத்துக் கொண்டு ஒரு வரை யொருவர் கொன்று குவித்துக் கொள்கிறார்கள்! இதைத் தவிர, யுத்த காலத்தில் திடீர்ப் பணக்காார் களானவர்களின் சொத்தில் பாதியாவது பறிமுதல் செய்து, அதைப் பொதுஜன நன்மைக்காகப் பயன்படுத்துவதற்கு ஒரு சட்டத்தையும் காணோம்.