பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வேலை நிறுத்தம் ஏன்? நாட்டின் உற்பத்திச் சக்தியை அதிகப்படுத்து வதற்கும், மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கும், இவைகளின் மூலம் கள்ள மார்க்கெட்டையும் லஞ்சப் பேயையும் ஒழிப்பதற்கும் ஒரு சட்டத்தையும் காணோம் அதிகார வர்க்கமாவது, "ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது!" என்று ஒர் அதிர் வேட்டுச் சட்டத்தைப் போட்டு ரகளை செய்தது; அதிகார வர்க்கமில்லாத சர்க்காரோ அதுகூடச் செய்யவில்லை! தேர்தலுக்கு முன்னால் நம் மதிப்புக்குரிய தலைவரான ஜவஹர்லால் நேரு, "கள்ளமார்க்கெட்காரர் களைத் தூக்கில் போடுவோம்!" என்று கர்ஜித்தார். தேர்தலுக்குப்பின்னால் அந்தக் கள்ளமார்க்கெட் காரர்களைப் பற்றி அவர் இன்று வரை கவலைப்படுவ தோடு நின்றிருக்கிறார். உணவுநிலைமையைச் சமாளிப்பதற்காகத் தப்பித் தவறிக் கொண்டு வந்த கொள்முதல் திட்டங்களும் இல்லாதவனை வாழ வைக்கவில்லை. இருப்பவனைத்தான் வாழவைக்கின்றன! அதாவது, 'உங்களுக்கு உணவு வேண்டுமானால் கள்ள மார்க்கெட்காரர்களையே நம்புங்கள்; கேட்கிற