பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 47 விலையைக் கொடுத்து அவர்களைத் திருப்தி செய்யுங்கள்!" என்று அவை நமக்கு உபதேசிக்கின்றன! இந்தப் படு மோசமான சூழ்நிலையில் உயிர் வாழ்வதற்குத் தொழிலாளிகள் தங்களுடைய மாதச் சம்பளத்தையாவது ஒரளவு உயர்த்திக் கொள்ளப் பார்ப்பது நியாயம். அந்த நியாயத்துக்காகச் சிலர் சொல்வது போல் அவர்கள் அவசரப் படவில்லை. 1936-ஆம் வருஷம் மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டதிலிருந்தே அவர்கள் தங்கள் கோரிக்கையை வற்புறுத்தி வந்திருக்கிறார்கள் மகாத்மா காந்தியைக் கூடத் தோற்கடிக்கக் கூடிய பொறுமையுடன் இருந்திருக்கிறார்கள். . அதாவது, யுத்தத்துக்கு முன்னால் ! அந்தக் கோரிக்கைக்கு அப்போதிருந்த அவசரத்தை விட, இப்போது அவசரம் அதிகரித்து இருக்கிறது என்பதை மனித இதயம் படைத்த எவனும் மறுக்க முடியாது. அப்படியிருந்தும், 'அவர்கள் அவசரப் படுகிறார்கள்!" என்று சொல்வதைப் போன்ற அறிவீனம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?