பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 49 காங்கிரஸில் கிடையாது; அவற்றைத் தாக்கி எழுதாத தேசியப் பத்திரிக்கைகளும் இல்லை. இப்பொழுதோ? - எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. அன்று அதிகார வர்க்கம் கையாண்ட அதே அடக்கு முறைகளை, இன்று அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரஸ் காரர்களும் கையாளுகின்றனர். அன்று, "அமைதியை நிலை நாட்டுகிறோம்!” என்று அவர்கள் சொன்ன அதே கதையை இன்று இவர்களும் சொல்லுகின்றனர் உரிமைப் போருக்கு முதன் முதலில் விதை விதைத்த காங்கிரஸ் மகாசபை, இப்பொழுது தொழிலாளிகளின் உரிமை பறிபோகும்போது ஒன்றும் சொல்ல வில்லை. உரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சட்டத்தை மீறுவதற்குத் தைரியமளித்த காந்திஜியும், தொழிலாளிகள் தாங்கவொண்ணாத அடக்கு முறை களுக்கு ஆளாகும் இந்தச் சந்தர்ப்பத்திலே ஒன்றும் சொல்லக் காணோம்.! அடக்கு முறைகளைக் கண்டித்துக் காரசாரமாகப் பேசும் காங்கிரஸ்காரர்களும் இப்பொழுது கிடையாது;