பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 57 விஷயத்தில் அவர் பிடிக்கும் பிடிவாதம் பிரசித்தி பெற்றது. காந்திஜியின் தனிப்பெரும் வோட்டைக் கொண்டு பிரதம மந்திரியானவர்கட அவ்வளவு பிடிவாதம் பிடிக்க மாட்டார் போலிருக்கிறது ! "அடக்கு முறைச் சட்டங்களையெல்லாம் உடைத் தெறிய வேண்டும்!" என்ற காங்கிரஸ் கொள்கைக்கு நேர் விரோதமாகச் செத்துப்போன அவசரச் சட்டங்களுக் கெல்லாம் புத்துயிர் கொடுத்து வருகிறார், சென்னைப் பிரதமர் பிரகாசம். இந்தப் புது வருடத்தில் போலீஸிற்குக் கவர்னர் சர்க்கார் செலவிட்டதை விடக், காங்கிரஸ் சர்க்கார் ஒரு கோடி ரூபாய் அதிகமாகச் செலவிடப் போகிறார்களாம். எதற்கு? உணவுப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்கல்ல; உடைப் பஞ்சத்தை ஒழிப்பதற்கல்ல; கள்ள மார்க்கெட்டைத் தொலைப்பதற்கல்ல; லஞ்சப் பேயை விரட்டுவதற்கல்ல; தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற் காகத்தான்!