பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5Ꮾ வேலை நிறுத்தம் ஏன்? வெள்ளைக்காரர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவதற்காகப் பதவியேற்ற காங்கிரஸ் சர்க்கார்களில் ஒன்றான பிரகாசம் சர்க்காரும் ரெய்னால்ட்டுடன் சேர்ந்தது எங்கும் - அதிகார வர்க்கம்கூட வெட்கித் தலை குனியும்படியான அடக்குமுறைத் தாண்டவம், ! லெக்ஷன் 144, "கூடாதே", "பேசாதே' என்று தொழிலாளிகளைப் பயமுறுத்திற்று. நிராயுதபாணிகளான தொழிலாளர் பலர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாயினர்; "வயிற்றுக்கு இல்லை" என்ற குற்றத்துக்காக இரத்தம் சிந்தினர். யதேச்சாதிகார சர்க்காராவது இம்மாதிரி அக்கிரமங்களைச் செய்துவிட்டால், பெயருக்காவது "விசாரணை என்று ஒன்றை நடத்திப் பொது ஜனங்களின் கண்ணிரைத் துடைக்கும் ஜனநாயக சர்க்காரோ அதுகூடச் செய்யவில்லை. ஏனெனில் அவர்கள்தான் ஜனநாயக சர்க்காராச்சே! தங்களைப் பற்றித் தாங்களே ஏன் விசாரணை நடத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்களோ, என்னமோ!