பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 67 தவிர வேறு எதையும் அறியாத தொழிலாளரைப் பழி வாங்குகிறார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள் இதற்கு ஒரே ஒரு உதாரணம் போதும். சென்ற ஜூன் மாதம் பக்கிங்காம் - கர்நாடிக் ஆலைத் தொழிலாளருக்கும் ஆங்கில முதலாளிகளுக்கும் இடையே ஒரு சின்னஞ் சிறு தகராறு எழுந்தது. அதாவது, ஆலையின் வாயிலில் காவலுக்காகப் பஞ்சாப்காரர்களை ஆலை முதலாளிகள் நியமித்து இருந்தார்கள். தமிழ்ப் பாஷை தெரியாத காரணத்தினால் அவர்களுக்கும் தொழிலாளிகளுக்கு மிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரு நாள் பஞ்சாபி காவற்காரர்கள் தங்கள் கையில் வைத்திருந்த இரும்புத் தடிகளால் தொழிலாளர்களில் சிலரை அடித்துவிட்டார்கள் இதன் காரணமாகப் பஞ்சாபி காவலாளிகளை மாற்ற வேண்டுமென்று எல்லாத் தொழிலாளிகளும் கோரினார்கள். முதலாளிகள் அவர்களுடைய கோரிக்கையை நிறை வேற்றாமற் போகவே, வேறு வழியின்றித் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.