பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 *స్ప్ర\స\స్త\న్స్లను\స\స\, \న్స్టన్త\ఫ్సన్స్ల పు: முன்னுரை என்னை "எழுத்தாளன்” என்று சொல்லிக் கொள்வதைவிடத் "தொழிலாளி” என்று சொல்லிக் கொள்வதில் நான் எப்பொழுதுமே பெருமை யடையவன். ஏனிெனில், என்றைக்காவது ஒருநாள் இந்த நாட்டு அரசியல், ஏன், உலக அரசியலே கூட - தொழிலாளர்களின் கைக்குத்தான் வந்து சேரப் போகிற தென்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது. அப்படியிருக்கும்போது யார்தான் தன்னைத் “தொழிலாளி” என்று சொல்லிக் க்ொள்வதில் பெருமை படையாமல் இருக்க முடியும்? ஆனால், எந்தக் கட்சியையும் நான் சேர்ந்தவனல்லன் என்பதை இங்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்றாலும் எந்தக் கட்சி, தொழிலாளி களுடைய நலனுக்காகத் தன்னுடைய நேரத்தை அதிகமாகச் செலவிடுகிறதோ, எந்தத் தலைவர்கள், தொழிலாளிகளுடைய நலனுக்காகத் தங்கள் வாழ் நாட்கள்ை அர்ப்பணம் செய்கிறார்களோ அந்தக்