பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 69 இதன் பயனாகச் சமீபத்தில் மன்னார்குடியில் மிராசுதார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே தகராறு நேர்ந்தது. இந்தத் தகராறைத் தீர்த்து வைப்பதற்காகச் சென்னை சர்க்கார் வழக்கம்போல் முதலில் போலீஸாரை அனுப்பி விட்டு, அப்புறம் ஒரு மத்தியஸ்தரை நியமித்தது. அந்த மத்தியஸ்தர் தீர்க்கமாக விசாரித்த பிறகு, எதிர்பாராத விதமாக விவசாயிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு செய்தார். "நாங்கள் பொதுஜனங்களின் வேலைக்காரர்கள்!" என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் மந்திரிகள், மேற்கூறிய மத்தியஸ்தரின் அந்தத் தீர்ப்பை நிறைவேற்றி வைக்க முடியாதென்று மறுதளித்து விட்டார்கள்! இந்தத் தீர்ப்புடன் இன்னொரு தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் மத்தியஸ்தர் மர்மம்' என்றால் என்னவென்பது விளங்கும். தமிழ் வருஷப் பிறப்பன்று விடுமுறை அளிக்க வேண்டுமென்று ஸ்பென்ஸர் கம்பெனி தொழிலாளர் கோரினார்கள்.