பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 77 12 (א பிரசித்தி பெற்ற ஆகஸ்ட் கலவரத்துக்குப் பின்னால் காங்கிரஸ் தலைவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட பூசலின் காரணமாகக் காங்கிரஸ் ஒரளவு பொதுஜனச் செல்வாக்கை இழந்திருந்ததென்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. எதிர்பாராத விதமாக யுத்தம் திடீரென்று முடிந்து, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்தியத் தேசீய ராணுவத்தைப் பற்றிய, பிரமிக்க வைக்கும் செய்திகள் வெளியாகி, செங்கோட்டை விசாரணை நடந்ததன் காரணமாகத்தான் காங்கிரஸ் பழையபடி பரிபூரணச் செல்வாக்கை யடைந்தது. இந்தச் செல்வாக்கை இழந்துவிட்டால் மீண்டும் பெறுவது இலேசான காரியமல்ல. இன்னொரு நேதாஜியும், இன்னொரு இந்தியத் தேசீய ராணுவமும், இன்னொரு செங்கோட்டை விசாரணையும் நடப்பது துர்லபம் !