பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வேலை நிறுத்தம் ஏன்? பெறும் தொழிலாளிகளைச் சுட்டிக்காட்டிப் பரிகாசம் செய்தது. தொழிலாளருடைய பிரச்சினை சம்பள உயர்வு மட்டும் அல்ல என்பதை அவர்கள் உணரவேண்டும். உழைப்பின் பயனாய் வரும் செல்வம் உழைப்பவனுக்கே உரியது என்ற அடிப்படையில், தேசத்தின் செல்வம் தேசமக்களுக்கே உரியது என்ற அடிப்படையில் எழுந்த பிரச்சினை அது. அந்தப் பிரச்சினையைப் புறக்கணித்தால் தொழிலாளிகளின் வேலை நிறுத்தப் போராட்டம், நாளடைவில் பொதுஜனங்களினி பொருளாதார விடுதலைப் போராட்ட மாகிவிடும். இந்தப் போராட்டம் ஆரம்பமாகிவிட்டால் உழைக்காமல் உண்ணும் முதலாளிகள் எந்த வேஷந் தரித்தாலும் பொதுமக்களிடையே இடம் பெற முடியாது. ஆகவே, மேற்கூறிய நிலை வருவதற்கு முன்னால் தேசீயம் என்னும் போர்வைபோர்த்த தலைவர்களும் கட்சிகளும், பத்திரிக்கைகாரர்களும் தங்கள் தங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளவேண்டும். இதை அவர்கள் கவனிப்பார்களா? ~$