பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 79 சாப்பிடு!" என்று தாராளமாக அனுமதி கொடுத்து விட்டாள். மகன் வந்து, "என்னம்மா, இட்லியைச் சாப்பிட்டு விட்டாயா?" என்று விசாரித்தான். இவ்வளவு நேரம் உனக்காகக் காத்திருந்து பார்த்துவிட்டு இப்பொழுது தான் சாப்பிட்டேன் - கொண்டா, தண்ணிரை!” என்று வாங்கிக் குடித்துவிட்டு, 'இன்று வேலையுண்டா, உனக்கு?" என்று கேட்டாள் அவள். 'இல்லையம்மா, அடுத்த வெள்ளிக் கிழமை கப்பல் வந்தால்தான் வேலை!" என்றான் அவன். "சரி, புறப்படு!" என்று அருகிலிருந்த கோலை எடுத்து ஊன்றிக்கொண்டு எழுந்தாள் அவள். "வேண்டாம்மா, எனக்கு வெட்கமாயிருக்கும்மா! உன்னோடு பிச்சை எடுக்க இனிமே நான் வரவே மாட்டேம்மா..." "இதிலே என்னடா, வெட்கம்? நாமென்ன திருடுகிறோமா, தில்லுமுல்லு செய்கிறோமா..?" 'திருடர்களும் தில்லுமுல்லுக்காரர்களும் வெட்கப் பட்டால்தான் நமக்கெல்லாம் இந்தக் கதி வந்து இருக்காதேம்மா" என்றான் அவன்.