பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வேலை நிறுத்தம் ஏன்? "எதைச் செய்தாலும் ரகசியமாகச் செய்யுங்கள். காசுக்குக் காசும் கிடைக்கும்; கெளரவத்துக்குக் கெளரவமும் கிடைக்கும்!" என்று தொடர்ந்தான் இட்டிலித் திருடனான ஆரோக்கியசாமி. "பூர்வ ஜன்மத்தில் இவன் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை'யாகப் பிறந்திருக்க வேண்டும் - நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான் அந்தோணி, "ஆமாம் ஆமாம் - இல்லாவிட்டால் அந்த வாடை இன்னும் அவனிடம் அடித்துக் கொண்டிருக்குமா?" என்று தன் நண்பன் சொன்னதை ஆமோதித்தான் ரத்தினம். அதற்குள் அவனைப் பொருட்படுத்தாமல் தன்னந் தனியாகத் தட்டுத் தடுமாறிக் கொண்டே நடக்க ஆரம்பித்துவிட்டாள் முத்தாயி. அப்போது தினசரிப் பத்திரிகை யொன்றைப் பிரித்துப் பார்த்தபடி அவளுக்கு எதிரே வந்தான் ஒருவன். அவள் மேல் அவன் மோதிக்கொண்டு, "ஏன் கிழவி, உனக்குக் கண் தெரியவில்லையா?" என்றான். "எனக்குத்தான் தெரியவில்லை; உனக்குமா தெரிய வில்லை?" என்று திரும்பக் கேட்டாள் அவள். அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "ஓ, நீ குருடியா? - சரி சரி, போ!' என்று அவளை விரட்டி விட்டு, மீண்டும் பத்திரிகையைப் பார்ப்பதில் தன் கவனத்தைச் செலுத்தினான் அவன்.