பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வேலை நிறுத்தம் ஏன்? 'இதென்னடா வம்பு? - அவர் இன்னும் எழுந்திருக்கவில்லை, ஐயா!" "எழுந்திருக்க வில்லையா! - உன்னால் எழுப்ப முடிய வில்லை என்று சொல்லு!" என்று அருகிலிருந்த வீணையை எடுத்து மீட்டிப் பூபாளத்தைப் போடு போடென்று போட்டான் ஓ.கே. பீதாம்பரம் அதைத் தடுத்து, பூபாளம் வாசிக்க இங்கே எத்தனையோ பேர் இருக்கிறார்கள்; நீ எழுந்திரு!" என்றான். அதற்குள், அங்கே என்ன சத்தம்?" என்ற இடிக் குரல் மறுபடியும் உள்ளேயிருந்து வந்தது. 'ஒன்றுமில்லை...' என்று கையைப் பிசைந்த வண்ணம் இழுத்துக் கொண்டே கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்த பீதாம்பரம், சட்டென்று தலையை வெளியே இழுத்துக்கொண்டு திருதிரு' வென்று விழித்தான். காரணம், அண்டர் கிரவுண்ட் பிராந்தி'யால் 'செந்தாமரைக் கண்ணனாகப் பட்ட முதலாளி, 'கோபியர் வேஷத்தில் பல பெண்கள் சூழ அங்கே அரியாசனத்தில் வீற்றிருந்தார், கொஞ்சும் ரமனானாக!