பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 பதிப்பாளர் வார்த்தை i. l வேலைநிறுத்தம் தொழிலாளர்களின் சக்திவாய்ந்த ஆயுதம்; ஆனால், அதுதான் அவர்களின் கடைசி ஆயுதம். அதை உபயோகித்துத் தோல்வி யடையும் தொழிலாளர் களின் நிலை மிகப் பரிதாபகரமாய் இருக்கும். இதை உணர்ந்திருந்தும், தொழில் வளர்ச்சி இன்னும் அதிகரிக்காத நிலையிலுள்ள நம் நாட்டில், இந்த ஆயுதம் அடிக்கடி உபயோகிக்கப் படுகிறது இதற்குக் காரணங்கள் பல விருக்கலாம். அக்காரணங்களை எல்லாக் கோணங்களிலுமிருந்து ஆராய்வதற்கு ஒரு விரிவான நூல் வேண்டும். ஆனால், இச்சிறு நூலிலே தொழிலாளர்களின் கட்சியை மிக அழகாக எடுத்துச் சொல்கிறார் எழுத்தாளர் விந்தன். எழுத்தாளர் விந்தன்' அவர்கள் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர் என்றுதான் தமிழ் உலகம் அறியும். அவர் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளிலும் தீவிரமாகச் சிந்திக்கிறார் என்பதற்கு இச் சிறுநூல் ஒரு சான்று. இந்நூலைத் தமிழ்மக்களின் முன்னால் வைப்பதில் பெருமை கொள்கிறோம். у طك ك