பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 95 'கால்-வீட் முடிவதற்கு ஒரு மணி நேரம் இருக்கு முன்பே நிசி லீலா அவசர அவசரமாக மேக்-அப்பைக் கலைக்கத் தயாரானாள். அவள் மேல் ஈ உட்கார்ந்தால் கூட எலெக்ட்ரிக் ஷாக் அடித்தாற்போல் துள்ளும் படாதிபதி, "என்ன, என்ன?' என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே மேக்-அப் அறையை நோக்கி விரைந்தார். அந்த அறையின் கதவை நெருங்கியதும் தனக்குப் பின்னால் இரைக்க இரைக்க ஓடி வந்த பீதாம்பரத்தை அவர் ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, "என்ன லீலா என்ன நடந்தது? எந்தப் பயல் உன்னை என்ன சொன்னான்? - சொல்லு, அவனை உடனே சுட்டு வீழ்த்திவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்!” என்று 'ரிவால்வ'ரை எடுக்க ஜிப்பாப் பையில் வையை விட்டார். 'ஒன்றும் நடக்க வில்லை!" என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே, வெல்வெட் ஜாக்கெட்டைக் கழற்றிய லீலா, திடீரென்று கட்டை விரலை அழுத்திப் பிடித்துக்கொண்டு அப்பப்பா!' என்று துடித்தாள். படாதிபதி பதறிப்போய் அவள் கட்டை விரலைப் பார்த்தார், சித்திர விசித்திரத்திற்காக ஜாக்கெட்டின்