பக்கம்:வேள் பாரி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தமிழ் நாட்டுப் பழங்கால வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் தமிழ் மக்கள் நன்ரு அறிந்துகொள்ள விரும்புகின்றனர். பள்ளிப் பிள்ளேகளும் பழந் தமிழ் நாட் டுப் பழக்க வழக்கங்களே அறிய வாய்ப்பு ஏற்படுகின்றது. அந்த வாய்ப்பின் அடிப்படையில் அமைந்ததே இந்நூல். மற்றவர்க்குக் கொடுத்து மகிழ்வதையே ஓர் இன்ப மாக இந்த நாடு கருதி வந்தது. மக்கள் மட்டுமன்றி, பறவை விலங்குகளையும், ஒரறிவுயிர்களாகிய புல், மரம் முதலியவைகளேயும்கூட அன்பால் நோக்கி அறம் புரிந்து. வாழ்ந்த பெரியார்கள் நாட்டில் பலர் வாழ்ந்திருக் கின்றனர். அவருள் தலையாயவன் பறம்பு நாட்டு மன்னன் பாரி. முல்லையின் வாட்டம் ப்ோக்கத் தன் அழகிய தேரை விட்டு வந்த கொடைமடம் பட்ட கொற்றவனுகிய பாரி யின் வரலாறு பலருக்குப் பயன்படத் தக்க வகையில் நாடக முறையில் இந்நூல் வெளிவருகின்றது. பாரி பாரி என்று பலரேத்தும் அம் மன்னன் புகழை இத் தமிழ் நாடு மறவாது. அந்த மறவா நெறியின் வழியே இந்நூல் அமைகின்றது. இதைத் தம் பதிப்பக நூலாக வெளியிட்ட ச்ென்ஃன டியூகோ பதிப்பகத்தாருக்கு என் நன்றி. - தமிழ்க் கலை இல்லம், ۔94کہ (Up. Lİ. சென்னை-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேள்_பாரி.pdf/5&oldid=920348" இலிருந்து மீள்விக்கப்பட்டது