பக்கம்:வைகையும் வால்காவும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆளாண்மை


காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்
பேணாமை பேணப் படும் எனவே-நாணாத
சாரின் பகை உவந்தான்! சால்புமிக மக்களரசு
ஊரறியத் தந்தான் லெனின். 81

வில்லேர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை என்றே-நல்லறிஞர்
கார்க்கி, செகாவ்மாய கோவசுகி போன்றோரின்
சீர்உணர்ந்து நட்டான் லெனின். 82

எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உள்பகை உள்ளதாம் கேடு எனலால்-மக்கட்கு
அழிவுசெயும் அன்பு இல் அலுவலரை ஐயன்
கழிவுசெய் திட்டான் லெனின். 83

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்; உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்என்-றுரிமையால்
வேளாளர் தம்மை வியந்தான்! தொழிலாளர்க்கு
ஆளாண்மை தத்தான் லெனின். 84

27