பக்கம்:வைணமும் தமிழும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வைணவமும் தமிழும்


என்று போற்றிப் புகழ்வர் வில்லிபுத்துராரின் திருமகனார் வரந்தருவார் வேதாந்த தேசிகரும்,

பாட்டுக்கு உரிய பழையவர்
மூவரைப் பண்டு ஒருகால்
மாட்டுக்கு அருள்தரும் மாயன்
நலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள்செக நான்மறை
அந்தி நடைவிளங்க
வீட்டுக்கு இடைகழிக் கேவெளி
நாட்டும் அம் மெய்விளக்கே.[1]

[மாடு - செல்வமாகிய ஆன்மா; நான்மறை அந்தி - உபநிடதம்; நடை - வழி, வெளி - உபாயங்கள்]

என்று போற்றியுள்ளார். அவரே இந்த வரலாற்றையும் 'தீங்கரும்பு கண் வளரும்?'[2] என்ற திருமங்கையாழ்வாரின் திருமொழியையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று ஆழ்வார்களைக் கரும்பினைப் பிழியும் ஆலையின் உருளைகளாகவும், அவர்களால் நெருக்குண்ட எம்பெருமானை நெருக்குண்ட இடமாகிய திருக்கோவலூர் அருகில் விளையும் கரும்பாகவும் அந்த எம்பெருமானின் செளலப்பிய குணத்தைச் சாறாகவும் உருவகித்து ஒரு வடமொழிச் சுலோகத்தாலும்[3] பாராட்டியுள்ளார். மேற்குறிப்பிட்ட திருக்கோவலூர் நிகழ்ச்சிக்குப் பின்னர், இம்மூவரும் திருவல்லிக்கேணியில்


  1. தே.பி. 89
  2. பெரி. திரு 2
  3. தேகளிஸ்வரஸ்துதி-7