பக்கம்:வைணமும் தமிழும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முரணாக நம்மாழ்வாரை அனைத்து ஆழ்வார்களுக்கும் பிற்பட்டவராகக் காட்டியிருப்பதை ஏற்க முடியவில்லை.

‘திவ்வியப் பிரபந்த இலக்கியப் பெருவிழா” என்ற ஐந்தாம் இயலில் திருவரங்கம் பெரிய கோயிலில் நடைபெறும் அத்யயன உற்சவத்தைப் பற்றி ஆசிரியர் மிகவும் விளக்கமாக வரைந்துள்ளார். அவ்வுற்சவத்தின்போது ஒவ்வொருநாளும் நடைபெறும் அரையர்சேவையைப்பற்றிய குறிப்புகளும் விளக்கமாக இடம் பெற்றுள்ளன.

“வைணவ உரைவளம்” என்ற ஆறாம் இயலில் திவ்வியப் பிரந்தங்களுக்கு அமைந்துள்ள வியாக்கியானங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. -

“வைணவ ஆசாரியர்கள்” என்ற ஏழாம் இயலில் ஓராண்வழி ஆசார்ய குரு பரம்பரைகள் தரப்பட்டுள்ளன. தென்கலை குருபரம்பரை வடகலை குருபரம்பரை ஆகிய இரண்டையுமே விளக்குகின்ற ஆசிரியர் நம்பிள்ளையின் சீடரும் ஈடுமுப்பத்தாறாயிரப்படியை ஏற்படுத்தியவருமான வடக்குத் திருவீதிப்பிள்ளையை நடாதூரம்மாளின் சீடராகக் குறிப்பிட்டுள்ளதும் வடக்குத் திருவீதிப்பிள்ளையின் தகப்பனார் பெயர் பிள்ளை உலகாசிரியர் என்று குறிப்பிட்டுள்ளதும் வியப்பாக உள்ளது. அவர் தம்முடைய குமாரருக்குத் தகப்பனாரின் பெயரையே இட்டிருக்கலாம் என்று ஆசிரியர் குறிப்பிடுவது மேலும் வியப்பைத் தருகிறது. கந்தாடைத் தோழப்பர் நம்பிள்ளையின் குணநலன்களை வியந்து கொண்டாடி உலகாசிரியர் என்ற பட்டத்தினை வழங்கினார் என்றும், வடக்குத் திருவீதிப்பிள்ளை தமது குமாரருக்குத் தமது ஆச்சார்யருடைய அத் திருநாமத்தையே

ix