பக்கம்:வைணமும் தமிழும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

93


திருமழிசையாழ்வாரைச் சந்தித்து அளவளாவியதாக வரலாறு. பின்னர் இவர்கள் திருக்கோவலூர் ஆயனாரைத் தொழுது விடை பெற்று நெடுங்காலம் திருப்பதிகள் தோறும் சென்று மங்களாசாசனம் செய்து யோகபலத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இம்மண்ணுலகில் வாழ்ந்திருந்து வையத்தினரை வாழ்வித்தனர் என்பது வைணவர்களின் நம்பிக்கை, ஆனால் இவருக்குப் பின்னர் தோன்றின ஆழ்வார்களுள் ஒருவராவது இவரைச் சந்தித்ததாகச் சான்றுகள் இல்லை.

இவர்கள் வாழ்ந்த காலம் : ஆராய்ச்சியாளர்கள் இவர்கள் வாழ்ந்த காலத்தை ஏழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம் என்று கருதுவர்.

(4). திருமழிசையாழ்வார் : இவர் தொண்டைநாட்டில் உள்ள திருமழிசை[1] என்ற திருத்தலத்தில் பகவானை வழிபட்டு வந்த 'பார்க்கவர்' முனிவருக்கும் 'கனகாங்கி' என்ற கட்டழகிக்கும் (தேவர் உலகிலிருந்து வந்தவள்) தைத்திங்கள் 'மகம்' நட்சத்திரத்தில் 'சுதர்சனம்' என்னும் திருவாழியின் அம்சமாக அவதரித்தவர். தசைப் பிண்டமாக தேவமங்கை அப்பிண்டத்தை வெறுத்து அருகிலுள்ள பிரப்பம் புதரில் எறிந்து விட்டுத் தன்னுலகம் சென்று விடுகின்றாள்.சின்னாளில் தசைப் பிண்டம் சிறந்ததோர் ஆண்குழந்தை வடிவமாகப் பரிணமித்து உயிர் பெறுகின்றது. பசி, நீர்விடாயால் பரிதவித்துத் தனியே அழுது கொண்டிருப்பதை அறிந்து அவ்விடத்தருகே திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஜெகந்நாதப் பெருமாள்


  1. திருமழிசை-திருவள்ளுர்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ளது இத்தலம்