பக்கம்:வைணமும் தமிழும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சூட்டினார் என்றும் மணவாளமாமுனிகள் உபதேசரத்தின மாலையில் (51,52) அருளிச் செய்துள்ளதற்கு மாறாக இக்கருத்து உள்ளது. மணவாள மாமுனிகள் தமது இறுதிக் காலத்தில்தான் துறவறம் மேற்கொண்டார் என்று ஆசிரியர் எழுதியுள்ளதும் மாமுனிகளின் வரலாற்றைப் பகரும் யதீந்த்ரப்ரவணப்ரபாவம் என்னும் நூலிலுள்ள செய்திகளுக்கு மாறாகவுள்ளது.

“வைணவ சீலர்கள்” என்ற எட்டாம் இயலில் மற்றுமுள்ள ஆசாரியர்கள் பலரைப் பற்றிய செய்திகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஆசாரியர்கள் பலரைப்பற்றிய அரிய செய்திகள் இவ்வியலில் இடம்பெற்றுள்ளன. இவ்வியலில் பட்டர் அனந்தாழ்வானுக்கு ஸ்ரீவைஷ்ணலக்ஷணம் கூறியதாக உள்ளது. பட்டரிடம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் பற்றிக் கேட்க பட்டர் அந்த ஸ்ரீவைஷ்ணவரை அநந்தாழ்வானிடம் அனுப்பி வைத்ததாகவும் அந்த ஸ்ரீவைஷ்ணவலக்ஷணத்தைப் பற்றிக் கூறியதாகவும்தான் குருபரம்பரையில் உள்ளது.

தொடர்ந்து வைணவசமயத் தத்துவங்கள் (9). வைணவ மந்திரங்கள் (10)இருவகை ஞானங்கள் (1) வீடுபேற்றிற்குரிய வழிகள் (12) நலம் அந்தம் இல்லதோர் நாடு (13) ஆகிய இயல்களில் புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமான வைணவக் கொள்கைகள் மிகவும் எளிய நடையில் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர் வழங்கியுள்ளமை இந்நூலின் சிறப்பான அம்சமாகும்.

மேலும் சம்ப்ரதாயங்கள் சில (14,15) வைணவ திவ்யதேசங்கள் (16) ஆகிய இயல்களிலும் மிகவும் அரிய கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. வைணவர்கள் நெற்றியில்

x