பக்கம்:வைணமும் தமிழும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வைணவமும் தமிழும்


வாளையுருவி நெருங்கிக் கேட்க அவரும் கலியனது வலத்திருச் செவியில் திருமந்திரத்தை உபதேசித்தார். அன்றியும், தாமும் பெரிய திருவடிமேல் காளமேகம் போன்ற திருமேனியுடன் பெரியப்பிராட்டியார், பூமிப் பிராட்டியார் சமேதராகச் சேவை சாதித்தார். இங்ஙனம் வழிப்பறி செய்யப் பெற்றவர் ஆண்டாளை மணம் புரிந்து வந்த திருவரங்கப் பெருமானே என்று திவ்விய சூரி சரிதம் குறிப்பிடும்.

கலியனுக்கு ஞான பக்தி வைராக்கியம் ஏற்படலாயிற்று. ‘வாடினேன் வாடி’ என்று தொடங்கி 'நான்கண்டு கொண்டேன்' 'நாராயணா என்னும்நாமம்' என்று முடியும்பத்துப்பாசுரங்களைப் பாடி முடித்தார். பின்னர் எம்பெருமானின் பெருங்கருணைத் திறத்தை வியந்து அம்மந்திரம் பிறந்த திவ்வியதேசத்தை (பதரி) வணங்கத் திருவுள்ளங் கொண்டு அங்குச் சென்று அதனை மங்களாசாசனம் செய்கின்றார். தொடர்ந்து வடநாடு, நடுநாடு, சோழநாடு, பாண்டிநாடு, மலை நாடு ஆகியவற்றிற்கு திருத்தலப் பயணங்களை மேற்கொண்டு 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்கின்றார். இங்ஙனம் தொடர்ந்து இறையதுபவம் பெற்று நெடுங்காலம் வாழ்ந்து முடிவில் நெல்லை மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடியில்[1] இறைவன் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினர்.

இவரது அருளிச் செயல்கள் : இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் ஆறு. அவை: (1) பெரிய திருமொழி (2) திருக்குறுந்தாண்டகம் (3) திருநெடுந்தாண்டகம் (4) திருவெழுக்கூற்றிருக்கை (5) சிறிய திருமடல் (6) பெரிய திருமடல் என்பவையாகும். இவற்றை 'மாறன் பணித்த தமிழ்

  1. பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 18இல் இஃது ஒன்று.