பக்கம்:வைணமும் தமிழும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

105


மறைக்கு மங்கையர் கோனின் ஆறங்கங்கள்' எனக் கருதுவர் வைணவப் பெருமக்கள்.இவற்றில் முதல் மூன்றும் பெரிய திருமொழியாக வடிவம் கொள்ளுகின்றன. இறுதி மூன்றும் இயற்பாப் பகுதியில் இடம் பெறுகின்றன.

இவரது காலம்: இந்த ஆழ்வார் வாழ்ந்த காலம் கி.பி. (716-881) என்று கொள்வர் ஆய்வாளர்.

ஒரு குறிப்பு: இவரது முறுகிய பக்தி நிலையை உண்ர்ந்து ‘திருநெடுந்தாண்டகமே' இவர் இறுதியாகப் பாடியது (சரமப்பிரபந்தம்) என்பர் ஒரு சாரர், பிறிதொரு சாரர் பெரிய திருமடலே இறுதியாகப் பாடியது (சரமப்பிரபந்தம்) என்று வற்புறுத்துவர் எது எங்ஙனமாயினும் இரண்டுமே உயர்ந்த பக்தி நிலைகளை காட்டுகின்றன என்பதை நாம் அறிகின்றோம். இரண்டையும் ஆழ்ந்து கற்று ஆழ்வார் பெற்ற அநுபவத்தைப் பெற முயல்பவருக்கு அவரவர் மனப்பக்குவத்திற்கு ஏற்ப எது ‘சரமப்பிரபந்தம்’ என்ற உண்மை தட்டுப்படும்.

(9). பெரியாழ்வார்: தென்தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துரில் வேயர் குலத்தில் பாகவத சம்பிரதாயத்தைத் தழுவியிருந்த குடும்பத்தில் பெரிய திருவடியின் (கருடன்) கூறாக ஆனி மாதம் 'சுவாதி' நட்சத்திரத்தில் தோன்றினார். தந்தையார் முகுந்த பட்டர்; அன்னையார் பதுமவல்லி. இவரது பிள்ளைத் திருநாமம் 'விஷ்ணுசித்தர்.' [1] இவர் மாலவனுக்கு மலர்த்தொண்டு புரியும் கைங்கரியத்தை மேற்கொண்டிருந்தார். அதற்காக அழகிய நந்தவனம் ஒன்று அமைத்து அதனைப் பரிபாலித்து வந்தார்.


  1. இவர் திருமொழியின் பதிகம்தோறும் உள்ள முத்திரைக் கவியால் (திருக்கடைக் காப்புச் செய்யுளாலும் உறுதிப்படும்)