பக்கம்:வைணமும் தமிழும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

107


புரோகிதராக இருந்தவர் திருக்கோட்டியூர்த் தலைவரான செல்வ நம்பி என்னும் சீரியோர்.[1]

இவரது அருளிச் செயல்கள்: இவர் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டு. (1) திருப்பல்லாண்டு (2) பெரியாழ்வார் திருமொழி. இவை இரண்டும் முதலாயிரத்தில் தொடக்கத்திலேயே அமைந்திருப்பவை. வேதாந்த தேசிகர் திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தம் அன்று; பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தை சேர்ந்ததே என்று நிலை நாட்டுவர்.

இவர்காலம் : ஆராய்ச்சியாளர் இவர்காலம் சீமாறன் சீவல்லபன் (கி.பி. 835-862) காலத்தவர் என்று கருதுவர்.[2] பெரியாழ்வார் 85 திருநட்சத்திரங்கள் வாழ்ந்தவர் என்பது குரு பரம்பரைகளால் அறியப் பெறுகின்றது. ஆகவே, இவர் கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கொள்ளலாம்.

(10). கோதை நாச்சியார் : பெரியாழ்வாரின் 'பெண் கொடி' எனத் திகழ்ந்த இவர் ஆடித் திங்கள் பூர நட்சத்திரத்தில் பூமிப்பிராட்டியாரின் கூறாக அவதரித்தவர். ஆழ்வார் அமைத்த நந்தவனமே இவர்தம் தோற்றத்திற்கு இடனாய்ப் பொருந்தியது. அந்த மலர்வனத்தில் ஒருபுறம் பச்சை பசேலென்று செழித்து வளர்ந்த திருத்துளவே இவர் வீற்றிருந்ததற்கு நிலைக்களனாய் அமைந்தது. பெரியாழ்வார் அக் குழவியைக் கண்டெடுத்து தமது மகளாகவே கருதி கோதை என்ற திருநாமம் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து


  1. திருப்பல் 8,9; பெரியாழ் திரு 4.48
  2. Gopinatha Rao, History of Sri Vaishnavas p.23; K.A.N. Sastri; History of South India-p 415.