பக்கம்:வைணமும் தமிழும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

111


அவ்விடையைச் செவிமடுத்த மதுரகவிகள் மிக மகிழ்ந்து அவரையே ஆசாரியனாகக் கருதி அவருக்குத் தொண்டு பூண்டொழுகுகின்றார். ஆழ்வார் மதுரகவிகளுக்குச் சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூன்று தத்துவங்களையும் உபதேசித்தார். இறைவனை நினைந்த வண்ணம் மகிழ்ச்சிப் பெருக்கினால் ஆழ்வார் கவி பாடத் தொடங்கினார். அக் விகளே அவரது அருளிச் செயல்களாகும்.

இவரது அருளிச் செயல்கள் : இந்த ஆழ்வாரின் அருளிச் செயல்கள்; (1) திருவிருத்தம், (2) திருவாசிரியம், (3) பெரிய திருவந்தாதி, (4) திருவாய்மொழி. இவை முறையே இருக்கு, யஜுர், அதர்வணம், சாமம் என்ற நான்கு மறைகளின் சாரமாக அமைந்துள்ளன என்பது அறிஞர்களின் கொள்கை. இவற்றுள் முதல் மூன்றும் இயற்பாத் தொகுதியிலும் நான்காவது இசைப்பாத் தொகுதியிலும் அமைந்துள்ளன.

இவரது காலம் : இவர் வாழ்ந்த காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று கொள்வர் ஆய்வாளர்.[1]

(12) மதுரகவியாழ்வார் : இவர் குமுதருடைய[2] கூறாகச் சடகோபர் தோன்றுவதற்கு அருணோதயம்போல் நெல்லை மாவட்டத்தில் திருக்குருகூர்க்கு அருகியிலுள்ள திருக்கோளுரில் சாம வேதிகளான பூர்வசிகைப் பார்ப்பனர் குலத்தில் சித்திரை மாதம் சித்திரைநட்சத்திரத்தில் தோன்றினார். இளமையிலேயே வேதம் சாத்திரம் முதலியவற்றைப் பயின்று செந்தமிழில்


  1. Gopinatha Rao, History of Srivaishnavas-p.21
  2. நித்திய சூரிகளில் ஒருவர்.