பக்கம்:வைணமும் தமிழும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணிந்து கொள்ளும் திருமண்காப்பு எம்பெருமானுடைய திருவடிகள் அல்ல என்பது ஆசிரியர் கூறும் புதுமையான கருத்து.

மேலே கூறியுள்ளபடி ஒரு சில கருத்து வேற்றுமைகள் இந்நூலில் அமைந்திருந்தாலும் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்வதற்குப் பயன்படும் முழுமையான நூல் இது என்பதில் துளியும் ஐயமில்லை. ஆசிரியரின் அறிவுத்திறனும் ஆய்வுத்திறனும் நூல்நெடுகிலும் வெளிப்படுகின்றன. தமது முதிய வயதிலும் அயராமல் பாடுபட்டு இப்படிப்பட்ட தொண்டினில் ஆசிரியர் ஈடுபட்டு வருவதற்கு வைணவ உலகம் கடமைப்பட்டுள்ளது.மேலும் பல்லாண்டுகள் பூரண உடல் நலத்துடன் வாழ்ந்திருந்து இதுபோல் மேலும் மேலும் பற்பல தொண்டுகள் செய்யும் வல்லமையைப் பேராசிரியர் சுப்புரெட்டியார் அவர்களுக்கு அருளுமாறு கீதாசார்யன் திருவடிகளை நினைந்து வேண்டுகிறேன்.

வயதிலும் ஞானத்திலும் இளையவனான அடியேனையும் ஒரு பொருளாக்கி அணிந்துரை எழுதும் வாய்ப்பை நல்கிப் பெருமைப் படுத்திய ரெட்டியார் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஶ்ரீவைஷ்ணவபாததூளி
வேங்கடகிருஷ்ணதாஸன்
xi