பக்கம்:வைணமும் தமிழும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

121



பிற்பகலில் முன்பு விட்ட ‘மண் அளந்த தாளாளா என்ற சொற்றொடரைக் கொண்டு வாமன திரிவிக்கிரமாவதாரத்தைத் தம்பிரான்படியில் சேவித்து அவ்வவதாரத்தை நடித்துக் காட்டுவார். இதற்குமேல் 'தண்குடந்தை நகராளா!' முதல் பதிக இறுதிவரைச் சேவிப்பார்.

எட்டாம் திருநாள் : இன்று ‘பண்டைநான்மறையும்’ (5.7;1) திருவரங்கம்பற்றிய திருமொழி தொடங்குகின்றது. இப்பாசுரத்திற்கு அபிநயமும் வியாக்கியானமும் முடிந்த பின்னர் அரையர் 'அரங்கம்’ என்ற சொல் பயிலும் இடங்களையெல்லாம் கோவையாக்கிச் சேவிப்பார். அடுத்த இரண்டு பாசுரங்களைச் சேவித்து 4-ஆம் பாசுரத்தில் 'ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான்' என்ற இடத்தில் நிறுத்தி அலைகடல் கடைந்ததைப் பிற்பகலில் நடித்துக் காட்டுவார். இத்துடன் இப்பகுதிக்குத் தம்பிரான்படி வியாக்கியானமும் சேவிக்கப் பெறும் இப்பதிகத்தின் எஞ்சிய பாசுரங்களைச் சேவித்துத் தலைக்கட்டுவார். இன்று பெரியதிருமொழி எட்டாம் பத்து முதல் பாசுரம் 'சிலை இலங்குபொன் ஆழி' (8.1:1) பதிகம் முடிய 250க்கு திருப்பாசுரங்கள் சேவையாகும்.

ஒன்பதாம் திருநாள் : இன்றைய திருநாளை பெரிய திருமொழி எட்டாம் பத்து இரண்டாம் திருமொழி ‘தெள்ளியீர்' (8.2:1) என்ற பாசுரத்துடன் தொடங்கும். இது தாய்ப்பாசுரம், தலைமகளின் நிலை கண்ட தாய் தன்மகளின் இளமையை எடுத்துக் காட்டி இவளை அலைக்கழித்தல் தலைமகளின் இயல்புக்குத் தகாது என்பது பதிகத்தின் உட்பொருள். இனி பத்தாம் பத்து முதல் திருமொழி ‘ஒருநல்சுற்றம்' (10.1:1) என்ற பதிகம் முடிய 200 பாசுரங்கள்