பக்கம்:வைணமும் தமிழும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

வைணவமும் தமிழும்


அரையரால் சேவிக்கப்பெறும். இதனோடு காலைநிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.

பிற்பகல் திருநெடுந்தாண்டகம் சிறப்பு நிகழ்ச்சியாகும். ‘மின்உருவாய்' (1) என்ற முதற் பாசுரத்திற்கு அரையர் அபிநயம் பிடித்து,பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் சேவிப்பார். இப்பாசுரத்திலிருந்து 'பட்டுடுக்கும்?' (11) என்ற பதினொராம் பாசுரம்வரை தம்பிரான்படி சேவிப்பார். இந்தப்பர்சுரம் காதல் கொண்ட மகளின் நிலையைத் தாய் கூறுவதாக அமைந்ததாய்ப் பாசுரம், ‘இவளுடைய நிலைக்கு எவர் காரணம்?' என்று குறி சொல்லும் கட்டுவிச்சியைத் தாய் கேட்பதும், கட்டுவிச்சி கூறும் விடையுமாக அமைந்தது. குறத்தி குறி பார்ப்பதற்காக முத்துகளைப் பரப்பி அதனால் நிகழ்ந்தவற்றையும் நிகழப்போகின்றவற்றையும் பார்ப்பது வழக்கம். இன்று அரையர் குறத்தியாக நின்று 'முத்துக்குறி' பார்ப்பார். அக்குறி பார்க்க அவர் பெருமானிடம் தீர்த்தமும், திருவடிநிலையான சடகோபமும் பெற்று அங்கு எழுந்தருளியுள்ள ஆழ்வார், ஆசாரியகட்கும் குழுமியுள்ளவர்கட்கும் அவற்றைச்சாதிப்பார். இது ‘முத்துக்குறி’என்று வழங்கப்பெறும்.[1]

பத்தாம் திருநாள் : இன்று மீண்டும் அரையர் பெரிய திருமொழிக்குப்போய் 'இரக்கம் இன்றி' (10.2;1)என்ற பாசுரம் தொடங்கி பெரியதிருமொழி இறுதி வரை சேவித்துத் தலைக்கட்டுவார். பின்னர் திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் இரண்டையும் சேவித்து முடிப்பார். இன்றைய


  1. ஆழ்வார் திருநகரியில் இன்று 'அக்கும் புலியின் அதளும்' (9.6:1) முந்துற உரைக்கேன் (9.8:1 என்ற பாசுரங்களுக்கு அபிந வியாக்கியானம்; நாளையே முத்துக்குறி.