பக்கம்:வைணமும் தமிழும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வைணவமும் தமிழும்



(2). இராப்பத்து

முதல்திருநாள்: ஏகாதசியன்று பெருமாள்அதிகாலையில் கருவறையிலிருந்து புறப்பட்டுப் பரமபத வாசல் வழியாகத் திருமாமணி மண்டபத்தை நோக்கி எழுந்தருள்வார். கிழக்குக் கோபுரவாசல் எதிரில் உள்ள மண்டபத்தில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமாதுசர் ஆகிய மூவரும் பெருமாளை எதிர்கொள்வர். அவர்கட்கு எதிரில் அரையர் ‘உயர்வற உயர்நலம் உடையவன்’(1.1:1) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தைத் தொடங்குவார். நம்மாழ்வார் பெருமாள் பக்கல் எழுந்தருள, அனைவரும் திருமாமணிமண்டபம் அடைவர். ஒவ்வொரு நாளும் இவ்வாறே அன்றைய பதிகத்தின் முதல் பாசுரத்தை ஆழ்வார் முன் அரையர் சேவித்து ஆழ்வாரைப் பெருமாள் பக்கல் எழுந்தருளச் செய்வது வழக்கமாக உள்ளது.

அன்று மாலை அரையர் அபிநயம் பற்றித் தம்பிரான்படி வியாக்கியானம் சேவிப்பார். அதனோடு நம்பிள்ளைஅருளிய ‘ஈடு' என்னும் திருவாய்மொழி வியாக்கியானத்தின் 'மகாப் பிரவேசம்’ என்னும் தோற்றுவாய் (அவதாரிகை) மூன்றாம் திருமகள் கேள்வனையும், (ஶ்ரீய;பதி)-முதல் பாசுரத்தின் வியாக்கியானத்தையும் சேவிப்பார் முதல் பாசுரம் ஆழ்வார்தம் மனத்தை விளித்துக் கூறுவது. இதில் பிரணவ எழுத்துகள் உம,அ பயின்று வந்துள்ளமை நோக்கத்தக்கது. உ-எழுத்து திருமகளைக் குறிக்கும் மங்கல எழுத்தோடு பிரபந்தம் தொடங்கும். ஈட்டின் 'மூன்றாம் திருமகள் கேள்வன்' அளவால் சிறியது. இதில் பொதுவாக நம்மாழ்வாருடைய நான்கு பிரபந்தங்களிலும் (திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்