பக்கம்:வைணமும் தமிழும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவ்யப் பிரபந்த இலக்கியப் பெருவிழா

125


மொழி, பெரியதிருவந்தாதி) கூறப்பெற்றுள்ள பொருள்கள், அவற்றிலுள்ள இராமாயணக் கருத்துகள், திருவாய்மொழியில் கூறப்பெறறுள்ள பொருள் இவற்றைக் கூறி அப்பொருளின் சுருக்கம் முதல் திருப்பதிகத்தின் சுருக்கம் முதல் அடி என முடிப்பார் ஈட்டாசிரியர்.

அரையர் இப் பாசுரத்தைச் சேவித்து, அபிநயம் பிடித்து, ‘மூன்றாம் திருமகள் கேள்வனையும்' ஈடுவியாக்கியானத்தையும் சேவித்தபின் முதல் பத்து முழுவதையும் இசையோடு சேவிப்பார்.

இரண்டாம் திருநாள் : இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள், திருவாய்மொழி இரண்டாம் பத்து, 'கிளர் ஒளி இளமை' (2.10:1) என்ற பாசுரத்திற்கு அபிநய வியாக்கியானம் சேவிக்கப்பெறும்.இது திருமாலிருஞ்சோலை மலையை இளமைப் பருவம் நீங்குவதற்கு முன்பே அடைவது சிறந்தது என்று கூறுவது.

மூன்றாம் திருநாள் : இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி மூன்றாம் பத்து. 'ஒழிவில் காலமெல்லாம்' (3.3;1) என்னும் பாசுரத்திற்கு அபிநய வியாக்கியானம் சேவிக்கப்பெறும். இந்தப் பாசுரம் 'அடிமை எக்காலத்தும் எவ்விடத்தும் எந்நிலைமையிலும் எம் பெருமானுக்கே உரியது ; அத்தகைய அடிமை செய்வது என் கடமை' என்ற கருத்தை வலியுறுத்துவது.

நான்காம் திருநாள் : இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள் திருவாய்மொழி நான்காம் பத்து. 'ஒன்றும் தேவும்’ (4.10;1)என்ற பாசுரத்தின் அபிநய வியாக்கியானம் சேவிக்கப்