பக்கம்:வைணமும் தமிழும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வைணவமும் தமிழும்


வியாக்கியானம் 'நெடுமாற்கு அடிமை செய்வேன்போல்'(8.10;1) என்ற பாசுரத்திற்கு இப்பதிகம் எம்பெருமானுக்கு அடிமையாக இருத்தலினும், அவன் அடியாருக்கு அடிமையாக இருத்தல் உயர்ந்தது என்ற கருத்து பற்றியது.

ஒன்பதாம் திருநாள் : இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள் ஒன்பதாம் பத்து. அபிநயவியாக்கியானம் ‘மாலை நண்ணித் தொழுது' (9.10;1) என்ற பாசுரத்திற்கு திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்வது இப்பாசுரம்.

பத்தாம் திருநாள் : இன்று அரையர் சேவிக்கும் பாசுரங்கள் பத்தாம் பத்து. விழாமுறையில் முந்தைய நாட்களினின்றும் சிறிது வேறுபாடு உண்டு. ஆழ்வாரைக் காலையிலேயே திருமஞ்சனம் (நீராடல்), செய்வித்துத் திருத்துழாமாலை அணிவிப்பர். 'சந்திரபுஷ்கரிணி' அருகில் 'ஸ்ரீரங்கராஜஸ்தவம்' 'உத்தர சதகம்' சேவிப்பர். இச்சேவை நிறைவெய்தியதும் 'பட்டரைப் பிரம்மரதம்' ஏற்றி வரிசைகளுடன் அவருடைய திருமாளிகைக்குக் கொண்டு சேர்ப்பர். பெருமாள் திருமணிமண்டபத்திற்கு எழுந்தருளியதும் அரையர் அபிநய வியாக்கியானம் செய்வது 'தாளதாமரைத்தடம்' (10.1,1) என்ற பாசுரத்திற்கு. ஆழ்வாருக்குத் தாம் பரமபதம் போவது உறுதியாகத் தெரிந்தது. தாம் அங்குப் போகும் வழி புதிது; பழகிய உடலையும் உலகையும் விட்டுப் புதுஉடல் கொண்டு புதிய இடத்திற்குப் போகையில், எம்பெருமானே வழித்துணை என்கின்றார்.

பத்தாம்பத்தில் முதல் எட்டுப்பாசுரங்களையும் அரையர் சேவித்தபின் ஆழ்வாரைத் தம் கைத்தலத்தில் ஏந்திக் கொண்டு