பக்கம்:வைணமும் தமிழும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவ்யப் பிரபந்த இலக்கியப் பெருவிழா

129


‘சூழ்விசும்பு பணிமுகில் (10.9) என்ற பதிகத்தின் ஒவ்வொரு பாசுரத்தையும் இருமுறை சேவிக்கப் பெருமாளிடம் கொண்டு விடுவார். ஆழ்வாரைப் பெருமாள் திருவடியில் கிடத்தி ‘முனியே! நான்முகனே’ (10-10) என்ற பதிகத்தின் ஒவ்வொரு பாசுரத்தையும் இருமுறை சேவிப்பார். இதனோடு அரையர் சேவை நிறைவு பெறும் பிரபந்தத்தைத் கட்டடியதும், பெருமாள் 'அரையரைப் பிரம்மரதம்' ஏற்றி வரிசைகளுடன் அவருடைய திருமாளிகைக்குச் சேரவிடுவார். அதன்பிறகே தம் கருவறைக்கு எழுந்தருள்வார்.

அன்றிரவு பெரிய கோவிலுக்குள் ஒரு மண்டபத்தில் இயற்பாவையும், திருவரங்கத்து அமுதனாரின் இராமாநுஜ நூற்றந்தாதியையும் இயலாக இசை நாடகம் இன்றிச் சேவிப்பார். இச்சேவை நிறைவெய்தியதும் மறுநாள் பகல் 'அமுதனாரைப்பிரம்மரதம்' ஏற்றி வரிசைகளுடன் அவருடைய திருமாளிகை சேர விடுவார். இத்துடன் இலக்கியப்பெருவிழா நிறைவேறுகின்றது.